தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு

தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு

1 mins read

மதுரை: மதுரையில் காவல் உதவி ஆய்வாளர் சிவராம கிருஷ்ணன் ரவுடிகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல் உதவி ஆய்வாளரைத் தாக்க முயன்ற குற்றத்திற்காக ரவுடி ராஜகிருஷ்ணன் உள்ளிட்ட ஐவர் கைதாகினர். மதுரை காமராஜர் சாலையோரமாக மது அருந்திக்கொண்டு இருந்த ரவுடிகள் சிலரை ரோந்துப் பணியில் ஈடுபட்ட சிவராமகிருஷ்ணன் கண்டித்துள்ளார். அப்போது ஆய்வாளரை ரவுடி கும்பல் தாக்க முற்பட, அவர் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.