நான்கு தமிழக மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை

நான்கு தமிழக மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை

1 mins read

ராமேஸ்வரம்: கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மூழ்கியதால் அவர்களை இலங்கை கடற்படை காப்பாற்றி கரை சேர்த்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று பொன்னழகு, சுகுமார், கணேசன், முருகன் ஆகிய நால்வரையும் இலங்கை கடற்படையைச் சேர்ந்த சுற்றுக் காவல் வீரர்கள் காப்பாற்றினர். காங்கேசன் துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்களிடம் அந்நாட்டின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்ற னர்.