பச்சிளம் குழந்தையின் தொடையில் சிக்கிய ஊசி இரு வாரங்களுக்குப் பிறகு அகற்றம்

1 mins read
28230a05-9a6b-40d4-aa42-0469cbec837d
குழந்தை பிறந்த அடுத்தநாள் போடப்பட்ட தடுப்பூசியின் முனை முறிந்து இரு வாரங்கள்வரை குழந்தையின் உடலிலேயே இருந்தது. படம்: ஊடகம் -

பிறந்த மறுநாளே தடுப்பூசி போடப்பட்டபோது முறிந்த ஊசி, குழந்தையின் உடலிலிருந்து இரு வாரங்களுக்குப் பிறகு அகற்றப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன், மலர்விழி தம்பதிக்கு அங்குள்ள அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

அதற்கு அடுத்த நாள் மாலை ஒரு தாதி குழந்தைக்குத் தடுப்பூசி போட்டார். ஊசியின் முனை முறிந்து குழந்தையின் தொடையிலேயே தங்கிவிட்டது.

ஊசி போட்ட இடத்தில் சிறிய அளவில் இருந்த வீக்கம், நாள்பட பெரிதானதுடன் குழந்தை தொடர்ந்து அழுது வந்ததாகக் கூறப்பட்டது.

சம்பவம் நிகழ்ந்து இரு வாரங்களாகிவிட்ட நிலையில் குழந்தையை அதன் பாட்டி பரிசோதித்தபோது ஊசி தொடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஊசி குழந்தையின் தொடையிலிருந்து அகற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

தாதியின் செயலைக் கண்டித்து மருந்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
குழந்தைதடுப்பூசி