முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும்: ஸ்டாலின்

முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும்: ஸ்டாலின்

1 mins read

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், "வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று திரும்பியிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். முதலீடுகள் குறித்து இரண்டு நாட் களில் தமிழக மக்களுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிட்ட ஒரு வாரத்தில் திமுக சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தத் தயார். சிலரை பல நாள் ஏமாற்றலாம். பலரை சில நாள் ஏமாற்ற லாம். எல்லோரையும் எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது," என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.