அதிசய 'சீட் பெல்ட்' அபராதம்

1 mins read
f7de9c93-90e4-49d2-8337-3253f3bf4323
-

கோவை: கோவை அருகே காளப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 7ஆம் தேதி, தனது மோட்டார் சைக்கிளில் தமிழக-கேரள எல்லையில் உள்ள வேலந்தாவளத்துக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கவுண்டன் சாவடி அருகே வந்த போது போலிசார் கார்த்திக்கிடம் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கார்த்திக் ஹெல்மெட் அணியவில்லை என்பதால் அவருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த அபராதத் தொகைக்கான ரசீதையும் பெற்றார். பின்பு வீடு திரும்பிய கார்த்திக், அபராதத் தொகை ரசீதைப் பார்த்தபோது, அதில் 'ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு' என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக 'சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்கு' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அபராதத் தொகையும் ரசீதில் குறிப்பிடப்படவில்லை.

ரசீதை (படம்) கார்த்திக் இணையத்தில் பதிவேற்றினார்.