கணவரை கொளுத்திய பெண்

கணவரை கொளுத்திய பெண்

1 mins read
fa6ce797-6943-40e9-90c3-f606c6695302
வள்ளியூர். கூகல் வரைபடம். -

வள்ளியூர்: நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள தெற்கு கள்ளிக்குளத்தில் வசித்துவந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி மரியலீலா. பாக்கியராஜ் 10 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் தையற்காரராக வேலை பார்த்துவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார்.

இந்நிலையில், தனது இரண்டு மகன்களுக்கு மட்டும் சொத்துகளை பிரித்துத்தர திட்டமிட்டு, அதிகாரியை வரச் சொல்லி நிலத்தை, அளந்தார் பாக்கியராஜ். இதைப் பார்த்த மரியலீலா, "மகன்களுக்கு மட்டும் சொத்தா? மகள்களுக்கு இல்லையா?" என கணவரிடம் கேட்டுள்ளார்.

இதனால் இருவரிடையே வாக்குவாதம் எழுந்தது. பின்னர், பாக்கியராஜ் தூங்கும்போது அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார் மரியலீலா. மருத்துவமனையில் பாக்கியராஜ் மாண்டார். மரிய லீலாவை வள்ளியூர் போலிசார் கைது செய்தனர்.