மதுரை மீனாட்சி கோயிலில் லட்டு வழங்கப்படும்

மதுரை மீனாட்சி கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வரும் தீபாவளி முதல் தினந்தோறும் லட்டு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 27ஆம் தேதி முதல் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் கொடுக்கப்படும் என்று அக்கோயிலின் அறங்காவலர் கருத்து கண்ணன் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“இதற்காக ரூ.5 லட்சம் செலவில் லட்டு தயாரிக்கும் இயந்திரத்தை வாங்கி இருக்கிறோம். இதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 500 லட்டுகள் தயாரிக்கப்படும்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரையில் மிகப் பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்,  அண்மையில் தூய்மைக்கான இந்திய அரசின் விருதைப் பெற்றது.