நடராஜர் சிலையை கொண்டுவர நிதி அளிக்காத அரசு

சென்னை: 1982ம் ஆண்டு தமிழக கோயிலிலிருந்து திருடப் பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை யை பொன் மாணிக்கவேல் தலை மையிலான குழு ஆஸ்திரேலியா வில் கண்டுபிடித்து அதை மீட்டு இந்தியா கொண்டு வந்துள்ளது. டெல்லியிலிருந்து கொண்டு வரப்பட்ட சிலை நேற்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல், “சிலைகள் கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறைசொல்ல விரும்ப வில்லை. அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத் தில்தான் பிரச்சினை உள்ளது. 

“அரசு நிதி அளிக்காததால் டெல்லியிலிருந்து விமானத்தில் எடுத்து வரமுடியா மல் சிலையை ரயில் மூலம் எடுத்துவந்து உள் ளோம்,” என்றார்.