அமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்

சென்னை: அமமுக பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் தமது கட்சியினருக்கு உயர்மட்ட அளவிலான பதவி அளித்து அறிக்கை விட்டுள்ளார். அமமுக அமைப்புச் செயலாளர்களாக நடிகர் செந்தில், கே.கதிர்காமு, எஸ்.கே.தேவதாஸ், சிவா ராஜமாணிக்கம், இரா.ஹென்றி தாமஸ் போன்றோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தினகரன் அறிவித்துள்ளார்.