பல பெண்களிடம் 100 பவுன் மோசடி: போலி சாமியார் கைது

பல பெண்களிடம் 100 பவுன் மோசடி: போலி சாமியார் கைது

1 mins read
44d5a608-0b3a-4508-b7fc-221711116882
-

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த போலி சாமியார் ஒருவர் கைதாகி இருக்கிறார். திருமணம் ஆகாத பெண்களுக்குச் சிறப்பு பூஜை நடத்துவதாகச் சொல்லி அவர் பல பெண்களை ஏமாற்றி 100 பவுன் நகைகளை மோசடி செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனந்தன், 24, என்ற அந்த சாமியார், வீட்டில் சிறப்பு பூஜை செய்யும்போது பெண்கள் தங்க நகைகளைக் கொண்டு வந்து பூஜையில் வைக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவார். அந்த நகைகள் 21 நாட்கள் கலசத்திலேயே இருக்கவேண்டும் என்று கூறி, அந்தப் பெண்களை நம்ப செய்து சாமியார் நகைகளைத் திருடிவிடுவார்.

இப்படியாக நூற்றுக்கும் ேமற்பட்ட பெண்களை அவர் ஏமாற்றி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. பலரும் போலிசிடம் புகார் தெரிவித்ததை அடுத்து போலி சாமியார் கைதானார். பல பெண்களையும் ஏமாற்றி 100 பவுன் நகைகளைத் திருடி அவற்றை அடகுகடையில் வைத்து பணம் வாங்கி அந்த சாமியார் தன் கடனை அடைத்து இருக்கிறார் என்பது போலிஸ் புலன்விசாரணையில் தெரிந்தது.

போலி சாமியாரைக் கைது செய்துள்ள போலிஸ், அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறது.