'காவேரியின் கூக்குரல்' மக்கள் இயக்கமானது

'காவேரியின் கூக்குரல்' மக்கள் இயக்கமானது

1 mins read
4ac5ef88-3fc7-40de-80ef-7f9269155347
-

சிதம்பரம்: 'காவேரியின் கூக்குரல்' பிரசாரம் மக்கள் இயக்கமாக மாறி உள்ளது என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

காவேரியின் கூக்குரல் பிரசாரத்தைத் தொடங்கி உள்ள அவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சென்றடைந்தார். பின்னர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த சத்குரு ஜக்கி வாசுதேவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 112 நாடுகளில் இருந்தும் அரசிடம் இருந்தும் இந்த இயக்கத்திற்கு உதவிகள் கிடைக்கின்றன என்றார்.