சென்னை: நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு ஆஸ்திரேலியாவுக்கு உயர் அதிகாரிகளை தமிழக அரசு அனுப்பி இருக்கிறது. அவர்கள் நேற்று தொடங்கிய ஆறு நாள் பயிலரங்கில் கலந்துகொள்ளச் சென்றனர். உயர் அதிகாரிகள் பலரும் சனிக்கிழமை மெல்பர்ன் நகருக்குச் சென்றனர்.
தமிழக அரசும் ஆஸ்திரேலியாவின் நெடுஞ்சாலைத் துறையும் ஏற்கெனவே கையெழுத்திட்டு உள்ள புரிந்துணர்வுக் குறிப்பின் கீழ் இந்தப் பயிற்சித் திட்டம் இடம்பெறுகிறது. மாநில அரசின் முதன்மைச் செயலாளர், அரசுச் செயலாளர், போலிஸ் கூடுதல் ஆணையர், தமிழ்நாடு சாலைத் திட்டத்துறை இயக்குநர் உள்ளிட்ட பலரும் அக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

