காமுகனுக்கு இரட்டை ஆயுள் சிறை

காமுகனுக்கு இரட்டை ஆயுள் சிறை

1 mins read

கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள மேத்தேபாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 22.

கடந்த 2016 ஜூலை 22ஆம் தேதி தோட்டம் ஒன்றில் அமர்ந்து தமது கைபேசியில் ஆபாசப் படம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது 16 வயது சிறுமி ஒருவர் அங்கு வந்தார். அச்சிறுமி தினேஷுக்கு தங்கை முறை.

ஆபாசப் படத்தைக் காட்டி அசசிறுமியிடம் தகாத முறையில் நடக்க தினேஷ் முயற்சித்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனாலும் அவரை தினேஷ் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அந்தச் சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். தப்பி ஓடிய தினேஷை மேட்டுப்பாளையம் போலிசார் தேடிப் பிடித்து கைது செய்தனர்.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஈராண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கின் விசாரணை முடிவுற்று நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக தினேஷ்குமாருக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார்.

தடயங்களை அழித்த குற்றத்திற்காக ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் அவருக்கு விதிக்கப்பட்டது.