சென்னை வரும் ஸி ஜின்பிங்; தீவிர ஏற்பாடு

சென்னை: சீன அதிபர் ஸி ஜின்பிங் சென்னைக்கு வருவதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னையை அடுத்துள்ள கோவளத்தில் உள்ள பிரம்மாண்ட நட்சத்திர விடுதியில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு மூன்று நாட்கள் தங்கியிருக்கும் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களுக்கு நடுவே அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27, 28 தேதிகளில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபரைச் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.

அப்போது இந்தியாவுக்கு வருமாறு சீன அதிபருக்கு திரு மோடி அழைப்பு விடுத்தார்.

இதனை சீன அதிபரும் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து அடுத்த மாதம் 11 முதல் 13ஆம் தேதி வரை சீன அதிபர் ஸி ஜின்பிங் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை தலைநகர் டெல்லிக்கு வெளியே உள்ள நகரத்தில் சந்தித்துப் பேச பிரதமர் மோடி விரும்புவதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் இரு தலைவர்கள் சந்தித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி-சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அடுத்த மாதம் 12, 13 தேதிகளில் மாமல்லபுரத்தில் இரு தலைவர்களின் சந்திப்பு நடைபெறவிருக்கிறது.

இதற்காக 11ஆம் தேதி இரவு இருவரும் மாமல்லபுரம் வரு வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாமல்லபுரத்துக்கு முன்பாக கோவளத்தில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்று உள்ளது.

கடற்கரையை ஒட்டியுள்ள மிக பிரம்மாண்டமான இந்த விடுதியில் சீன அதிபரும் பிரதமர் நரேந்திர மோடியும் தங்குவதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரிகிறது.

இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த விடுதிக்குள் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான வசதிகள் இருப்பதால் இரு நாட்டுத் தலை வர்களும் அங்கேயே தங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விடுதி, கடற்கரைக்கு மிக அருகே ரம்மியமான சூழலில் அமைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 11ஆம் தேதியன்று இரவு இருநாட்டுத் தலைவர்களும் ஹெலிகாப்டர் மூலமாக நட்சத்திர விடுதிக்குள்ளே வந்திறங்குவார்கள் எனவும் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்து வார்கள் எனவும் தெரிகிறது.

பேச்சுவார்த்தையை நிறைவு செய்யும் இரு நாட்டுத் தலைவர் களும் அக்டோபர் 13ஆம் தேதி சென்னையில் இருந்து தலைநகர் டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!