சென்னை: ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிப் பதற்காக மூதாட்டி ஒருவர் காரில் கடத்தி படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை ஆலந்தூா் புதுப்பேட்டை தெருவைச் சோ்ந்த 62 வயது விஜயலட்சுமிக்கு ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலம் கா்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ளது.
இந்த நிலத்தை விற்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அவர், கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள ஒரு வழக்குரைஞரை சந்தித்துள்ளார்.
ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
விஜயலட்சுமியை அவரது குடும்பத்தினா் தேடினா். ஆனால் அவா் எங்கேயும் கிடைக்கவில்லை.
இதையடுத்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் செய்தனா்.
அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலிசார் விசாரித்து வந்தனர்.
விஜயலட்சுமியிடம் கைபேசியில் தொடர்பு கொண்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் கா்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிங்கசாந்தரா பகுதியைச் சோ்ந்த 33 வயது நிலத் தரகா் பாஸ்கரும் ஒருவர்.
போலிசார் விசாரணையில் பல்வேறு விவரங்கள் தெரிய வந்தன. விஜயலட்சுமியிடம் நல்ல முறையில் பாஸ்கர் அடிக்கடி தொடா்பு கொண்டு பேசியுள்ளார்.
ஆனால் விஜயலட்சுமி வைத்திருந்த நிலத்தை அபகரிப்பதற்காக அவர் திட்டமிட்டதாக போலிசார் விசாரணையில் தெரிய வந்தது.
சம்பவத்தன்று வழக்குரைஞரை சந்தித்துவிட்டு விஜயலட்சுமி திரும்பும்போது, அவரை பார்க்க வந்திருந்த பாஸ்கா், தனது காரில் வீட்டில் கொண்டு விடுவதாக ஏற்றியுள்ளார்.
பாஸ்கா் வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு கடையில் காரை நிறுத்தி விஜயலட்சுமிக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்துள்ளார்.
அந்த குளிர்பானத்தில் விஜயலட்சுமிக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்ததால் அவா் மயங்கினார்.
இதையடுத்து அவரை, கடத்திக் கொண்டு பாஸ்கரும் அவரது கூட்டாளி சதீஷும் பெங்களூருவுக்குப் புறப்பட்டனர்.
ஆனால் குளிர்பானத்தில் அதிகளவுக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்ததால் விஜயலட்சுமி காரிலேயே இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாஸ்கா் பெங்களூரு சென்ற பின்னா் விஜயலட்சுமி காரில் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே அவா் விஜயலட்சுமியின் சடலத்தை காரில் கா்நாடக மாநிலம் கோலார் அருகே பேத்மங்கலம் என்ற பகுதிக்கு கொண்டு சென்று, அங்கு ஒரு கால்வாயில் சடலத்தை வீசி பெட்ரோல் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளார்.
விசாரணையில் இத்தகவல்கள் கிடைத்ததும் மடிப்பாக்கம் போலி சார், கர்நாடகாவில் உள்ள பேத்மங்கலம் போலிசாருக்குத் தகவல் தெரிவித்தனா்.
மேலும் இந்த வழக்கின் விசா ரணை பேத்மங்கலம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து கா்நாடக போலி சார், வழக்குக்குரிய ஆவணங்களை செவ்வாய்க்கிழமை பெற்றுச் சென்றனா். மேலும் பேத்மங்கலம் போலிசாரிடம் பாஸ்கர் ஒப்படைக்கப் பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய பாஸ்கரின் நண்பர் சதீஷ்ஷுக்கும் போலிசார் வலை வீசியுள்ளனர்.

