ஓடும் ரயிலை நிறுத்த முயன்ற ஆறுசாமி மரணம்

ஓடும் ரயிலை நிறுத்த முயன்ற ஆறுசாமி மரணம்

1 mins read
80af5e1d-fbc2-4a10-aaf4-be63c8ca6379
(கோப்புப் படம்: த ஸ்டார்) -

குடிபோதையில் இருந்த ஓர் ஆடவர், ஓடும் ரயிலை நிறுத்த முயன்றபோது ரயிலால் இடிபட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகத்தில் நடந்தது.

53 வயது ஆறுசாமி, மது அருந்திய பிறகு வீட்டுக்கு நடந்துகொண்டிருந்தபோது ரயில் தடம் ஒன்றை வழியில் கண்டார்.

ஓடும் ரயிலைத் தன்னால் நிறுத்த இயலும் எனக் கூறிய அவர், தடத்திற்கு முன்னால் இருந்த நுழைவாயில் தடுப்பின் மீது ஏறிச் சென்றார். நுழைவாயிலில் இருந்த பாதுகாவலர் ஆறுசாமியைத் தடுக்கும் பொருட்டு அவரைப் பின்னால் இழுக்க முயன்றார். ஆனால் அதற்கு முன்பாகவே வேகமாகச் சென்ற ரயில் ஆறுசாமியின் உயிரைப் பறித்தது.