முகிலன் வழக்கு ஒத்திவைப்பு

மதுரை: மஞ்சுவிரட்டுக்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து கடந்த 2017ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மதுரையில் சமூக செயல்பாட்டாளர் முகிலன் தலைமையிலும் போராட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக போலிசார் 64 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கு மதுரை மாவட்ட 2வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதன் விசாரணை நடைபெற்றபோது, முகிலன் முன்னிலையாகாமல் தலைமறைவானார். 

இதனால் அவர் மீது உள்ள வழக்கு மட்டும் தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகிலனை மஞ்சுவிரட்டு வழக்கு விசாரணைக்காக மதுரை நீதிமன்றத்தில் நேற்று காவல்துறையினர் முன்னிலைப்படுத்தினர்.

முகிலன் தவிர மேலும் மூன்று பேரும் முன்னிலையாயினர். 

வழக்கு விசாரணையை நீதிபதி அடுத்த அக்டோபர் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.