ஜெர்மன் நிதி உதவியுடன் 2,000 மின் பேருந்துகள்

கரூர்: ஜெர்மன் நாட்டு நிதி உதவியுடன் 2,000 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கரூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் தெரிவித்தார். 

தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவ தாகவும் விரைவில் 50 குளிர் சாதனப் பேருந்துகள்,    2,000 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அமைச்சர் நிதி உதவிகளை வழங்கினார்.