பாட்டியை சிக்கவைத்து பெண்களைக் காத்தார்

ஈரோடு: வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 35 வயதுள்ள இரு பெண்களைத் தன் வீட்டிற்கு வரவழைத்து அவர்களைப் பாலியல் வலையில் சிக்கவைக்க முயன்ற 72 வயது பாட்டி கைதானார். 

ஈரோடு சின்னசெட்டிபாளையத் தைச் சேர்ந்த சரோஜா என்ற அந்தப் பாட்டி அழைத்ததால் சசிகுமார் என்ற 27 வயது குடிநீர் சரிபார்ப்பு ஊழியர் ஒருவர் அவருடைய வீட்டிற்குப் போனார்.

அந்த ஊழியரிடம் ரூ.1,000 கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் அதற்கு வசதியாக தன் வீட்டில் இரண்டு பெண்கள் இருப்பதாகவும் பாட்டி கூறினார்.

சசிகுமார் அந்தப் பெண்களிடம் பேசியதை அடுத்து உண்மை தெரியவந்தது. அவர் பாட்டியை போலிசிடம் காட்டிக்கொடுத்து பெண்களை மீட்டார். பெண்கள் ஈரோட்டில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பெரம்பலூரைச் சேர்ந்த தாய் ஒருவர் 20  ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் மணிகண்டனை(நடுவில்) கண்டுபிடித்த தாய் இந்திரா (இடது). வளர்ப்புத் தந்தை அபிபுல்லா (வலது).

15 Oct 2019

‘20 ஆண்டுக்குப்பின் தந்தையின் தோற்றத்தை வைத்து மகனைக் கண்டுபிடித்த தாய்’

கைதான நால்வரில் ஒருவரான பிரவீன்குமாா் ஐஏஎஸ் தோ்வு எழுதுவதற்காக கோவையில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளாா். பூபதி பொறியியல் பட்டதாரி ஆவாா். இவர்கள் அச்சடித்து புழக்கத்தில் விட வைத்திருந்த ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.50 கள்ள நோட்டுகள் கத்தை கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டன.
படம்: ஊடகம்

15 Oct 2019

கள்ளநோட்டை புழங்கவிட்ட கும்பல் தலைவன் வாக்குமூலம்