நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் கொலைகள்

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் கொலைகள் நிகழ்ந்து வருவதால் காவலர்கள், அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஏழு காவல் ஆய்வாளர்களும்  40 காவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் 19 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை போலிஸ் சரியாகக் கண்காணிக்கவில்லை என்று மக்கள் புகார் கூறினர்.