தவறு செய்யாத 428 பேர் மீது போலிஸ் வழக்கு

தவறு செய்யாத 428 பேர் மீது போலிஸ் வழக்கு

1 mins read

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்காத நிலையில், அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் வெளியில் கசிந்துள்ளன.

அதில், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை குறிப்பாக 18 முதல் 30 வயதைச் சேர்ந்தவர்களை காவல்

துறையினர் எந்த ஆதாரமின்றியும் கடுமையான தாக்குதல்களை நடத்தியும் கைது செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிமனித உரிமைகளைச் சிதைத்து தகாதமுறையில் காவல்துறையினர் நடந்துகொண்டதாகவும் எந்தத் தவறும் செய்யாத 428 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளது என தமிழக இணையச் செய்தி ஒன்று குறிப்பிட்டுள்ளது.