கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை கொண்டாடிய பிரமுகர்

ராமநாதபுரம்: மதிமுகவின் ராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளராக இருந்தவர் அரு.சுப்பிரமணியன். கடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்

கனிக்கு ஆதரவாக சுப்பிரமணியன் செயல்படவில்லை என்றும் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டார் என்றும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சுப்பிரமணியனிடம் வைகோவின் உதவியாளர் அருணகிரி இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மதிமுகவில் இருந்து அரு.சுப்பிரமணியன் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பை சுப்பிரமணியன் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடியதோடு சுவரொட்டி அடித்து ஒட்டியுள்ளார். அதில், “கடனாளி ஆகாமல் தடுத்து என்னை கட்சியை விட்டு நீக்கிய வைகோவுக்கு நன்றி,” என குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!