திரும்பி வந்த விமானம்: 240 பயணிகள் உயிர் தப்பினர்

திரும்பி வந்த விமானம்: 240 பயணிகள் உயிர் தப்பினர்

1 mins read

சென்னை: சென்னையி லிருந்து தோஹாவுக்கு நேற்று காலை இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப் பட்டுச் சென்றது. அதில் 240 பயணிகள் இருந்தனர். சென்னை விமானநிலையத் தில் இருந்து பறக்கத் தொடங்கிய விமானம் நடுவானை அடைந்தபோது அதில் மின்கசிவு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். விமானத்தைத் தரையிறக்க முடிவு எடுத்த அவர் சென்னை விமான நிலையத்தின் அனுமதியைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து அந்த விமானம் திரும்பி வந்து அவசரமாகத் தரை இறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் வேக வேகமாக வெளியேற்றப் பட்டனர். விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 240 பயணி களும் உயிர்தப்பினர்.