17 வயது சிறுமியை சீரழித்த கும்பல்

17 வயது சிறுமியை சீரழித்த கும்பல்

1 mins read

தூத்துக்குடி: விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் போலிசில் புகார் அளித்தார். தூத்துக்குடி யில் உள்ள இறால் பண்ணையில் தாம் வேலை பார்த்த போது உடன் பணியாற்றியவனே, நண்பர்களுடன் சேர்ந்து தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் புகாரில் அவர் ஆதாரங்களுடன் குறிப்பிட்டிருந்தார்.

அழகு ராஜா, சுரேஷ் குமார் ஆகிய ஊழியர்கள் தம்முடன் நெருங்கிப் பழகியதாகவும் அதை நம்பி அவர்களுடன் சென்றபோது, அவர்களது நண்பர்கள் ராமச்சந்திரன, ராமலிங்கம் ஆகியோருடன் சேர்ந்து நால்வரும் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி கூறினார்.

உடனடியாக வழக்குப் பதிவு செய்த மகளிர் போலிசார், நால்வரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். பாலியல் குற்றங்களிலிருந்து சிறாரைக் காப்பாற்றும் 'போக்சோ' சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.