தமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 29% குறைந்தது

தமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 29% குறைந்தது

1 mins read

சென்னை: மிக அதிக அபராதங்களை விதிக்காத பழைய சட்டங்களை அமல் படுத்துவதன் மூலமே போக்குவரத்து விதிமீறல் களைக் கட்டுப்படுத்திய மாநிலங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2016ல் சாலை விபத்துகளில் 17,218 பேர் மாண்டனர். 2018ல் பலி எண்ணிக்கை 29% குறைந்து 12,216ஆக இருந்தது. தமிழக காவல்துறையின் பல்வேறு நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என ஒரு தேசிய அறிக்கை கூறியது.