சென்னையில் திருடிய 6 பேர் கும்பல் வடமாநிலத்தில் சிக்கியது

சென்னையில் திருடிய 6 பேர் கும்பல் வடமாநிலத்தில் சிக்கியது

1 mins read

சென்னை: சென்னை நங்கநல்லூரில் ரமேஷ் என்ற கிரானைட் ஏற்றுமதி தொழிலதிபர் வீட்டில், 120 பவுன் நகை, வைர நெக்லஸை திருடிய 6 பேர் கொண்ட கும்பலை, மத்தியப் பிரதேசத்தில் போலிஸ் நேற்று கைது செய்தது. கொள்ளை நடந்த வீட்டிற்கு வெளியே இருந்த படச்சாதன காட்சிகளை ஆராய்ந்தபோது, வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பலின் நடமாட்டம் தென்பட்டது. அதை யடுத்து கொள்ளையர்கள் கைதானதாகத் தெரிவிக்கப்பட்டது.