சென்னை: பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி சென்னை வருகிறார். அதன் காரணமாக சென்னை விமானநிலையத்திற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதல் தடவையாக தமிழகம் வரும் பிரதமர், ஐஐடி பட்டமளிப்பு விழாவில் மாணவ- மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

