நெடுஞ்சாலையில் லாரி உட்பட கனரக வாகனங்கள் படுவேகமாகச் சென்று கொண்டிருக்கும்போது, அந்தச் சாலையின் நடுவில், மது போதையில் இருந்த இருவர் சாவகாசமாக அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில், வேகமாகச் செல்லும் வாகனங்களைக்கூட கண்டுகொள்ளாமல் இருவரும் போதையில் தள்ளாடியபடி சாப்பிட்டதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க இருவரும் தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்தக் காட்சியைக் கண்டவர்கள் ஆத்திரமடைந்ததுடன், சம்பவத்தை கைபேசிகளில் பதிந்து இணையத்தில் பரப்பிவிட்டுள்ளனர்.
நெடுஞ்சாலையின் நடுவில் அமர்ந்து சாவகாசமாக பிரியாணி சாப்பிட்ட இருவர்
1 mins read
நெடுஞ்சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்களைக்கூட கண்டுகொள்ளாமல், சாலையின் நடுவில் அமர்ந்து மதுபோதையுடன் தள்ளாடியபடி பிரியாணி சாப்பிட்டனர். படம்: ஊடகம் -
குறிப்புச் சொற்கள்


