கனிமொழி மீதான வழக்கை மீட்டுக்கொண்ட தமிழிசை

கனிமொழி மீதான வழக்கை மீட்டுக்கொண்ட தமிழிசை

1 mins read

சென்னை: துாத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த தேர்தல் வழக்கை மீட்டுக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழிசை சவுந்தரராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.

துாத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி, பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பலர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் தமிழிசையை விட 3.47 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று கனிமொழி வெற்றி பெற்றார். இதனால் கனிமொழி வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழிசை தேர்தல் வழக்கு தொடுத்திருந்தார்.

தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றுள்ள நிலையில் தேர்தல் வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழிசை சார்பில் வழக்கை மீட்டுக்கொள்ள அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து தேர்தல் வழக்கு மீட்பு குறித்து அரசின் அதிகாரபூர்வ இதழில் வெளியிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், விசாரணையை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.