நாகப்பட்டினம்: நாகையில் கடந்த எட்டு நாட்களாக போலிசார் மேற்கொண்ட சோதனைகளில் 21 பெண்கள் உட்பட 183 பேர் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்த எஸ்.பி., ராஜசேகரன், "நாகை மாவட்டத்தில் தனிப்படையினர் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடத்திய சோதனையில் சாராய விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட 21 பெண்கள், 162 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்," என்றார். அவர்களிடம் இருந்து 14,000 லிட்டர் புதுச்சேரி சாராயம், 19 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
21 பெண்கள் உட்பட 183 பேர் மீது சாராய வழக்கு
1 mins read

