மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு; எச்சரிக்கை

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு; எச்சரிக்கை

1 mins read

சென்னை: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியை எட்டும் என்பதால் இரவு முழுவதும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர் என்று அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். "ஆற்றின் ஓரங்களில் நின்று 'செல்பி' எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். நீரின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம். காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்," என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.