சென்னை: தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்கவிருக்கும் நிலையில், சென்னையில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசுக் கட்டடங்கள் உறுதியாக, பாதுகாப்பாக உள்ளதை உறுதிப்படுத்த பொதுப் பணித்துறை 50,132 கட்டடங்களைச் சோதித்தது.
அந்தக் கட்டடங்களில் காணப்பட்ட குறைபாடுகளைப் போக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. தலைநகர் சென்னையில் பெய்யும் மழையில் 60% வடகிழக்குப் பருவமழை மூலம் கிடைக்கிறது. அக்டோபர் நடுப்பகுதியில் கடும்மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு கட்டடங்களில் மின் இணைப்புகள், வடிகால்கள், கூரைகள், சாக்கடைகள், பொது வழிகள், மரம், செடி கொடிகள் சோதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

