முதலமைச்சரை வழியனுப்ப துப்பாக்கியுடன் வந்த நிர்வாகி

முதலமைச்சரை வழியனுப்ப துப்பாக்கியுடன் வந்த நிர்வாகி

1 mins read

சென்னை: முதலமைச்சர் பழனிசாமி சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் கோவை சென்றார்.

அவரை வழியனுப்ப சென்னை விமான நிலையத்திற்குச் சென்ற காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜீவானந்தத்தை போலிஸ் சோதனையிட்டபோது அவரிடம் துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.

துப்பாக்கி தொடர்பான ஆவணங்களை அவர் காட்டவில்லை. உரிய ஆவணங்களையும் சான்றுகளையும் தாக்கல் செய்த பிறகு அவரை எச்சரித்து அனுப்புவதா அல்லது நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து போலிஸ் முடிவு செய்யும் என்று தெரிய வருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.