அமெரிக்கா செல்லும் மின்துறை அமைச்சர் தங்கமணி

அமெரிக்கா செல்லும் மின்துறை அமைச்சர் தங்கமணி

1 mins read

சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி பல அதிகாரிகளோடு அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார். மின் வாரியத்திற்கு ஆலோசனை வழங்க உள்ள அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வகங்களை அவர்கள் பார்வையிட உள்ளனர். புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை முழுவதும் பயன்படுத்த பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து அவற்றைத் தமிழகத்தில் செயல்படுத்தும் வழிகளையும் அவர்கள் ஆராய்வர் எனத் தெரிவிக்கப்பட்டது.