40 பெண்கள் சீரழிப்பு: ஆட்டோ ஓட்டி கைது

40 பெண்கள் சீரழிப்பு: ஆட்டோ ஓட்டி கைது

1 mins read
5182cf0c-f920-4562-9c95-0e65273e9592
ஆபாசக் காணொளி எடுத்து 40 பெண்களை மிரட்டி பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தியதாகக்  கூறப்படும் சேலம் ஆட்டோக்காரர் மோகன்ராஜ். படம்: ஊடகம் -

சேலம்: ஆபாசக் காணொளிகளை எடுத்து 40 பெண்களை மிரட்டி அவர்களைப் பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் சேலம் ஆட்டோக்காரர் மோகன்ராஜ் என்பவரை போலிஸ் கைது செய்துள்ளது.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள செல்லியம்பாளை யத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், 42, ஓர் வாலிபரிடம் பாலியல் பிரச்சினை கிளப்பியதை அடுத்து போலிசிடம் சிக்கினார்.

அதேவேளையில், திருமணம் ஆன ஒரு பெண்ணை மோகன்ராஜ் மிரட்டி, தாக்கி, கட்டாயப்படுத்தி உல்லாசத்தில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளி ஒன்றும் வெளியானது.

அதையடுத்து மோகன்ராஜ் கைபேசியை போலிஸ் அலசியது. அதில் மோகன்ராஜ் ஏழு பெண்களைப் பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தியதைக் காட்டும் காணொளிகள் இருந்ததைக் கண்டு போலிஸ் அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

மோகன்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இயங்கி வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார் என்றும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி விசிகவில் இருந்து இவர் நீக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

ஆட்டோவில் வரும் பெண்களிடம் பேச்சு தந்து, அவர்களின் கைபேசி எண்ணைத் தந்திரமாக வாங்கி வைத்துக்கொண்டு, அவர்களை மிரட்டி தன் இச்சைக்கு அவர்களை மோகன்ராஜ் பணிய வைத்துள்ளார். இப்படி அவர் மொத்தம் 40 பெண்களைக் கொடுமைப்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் தன்னிடம் சிக்கும் பெண்களைக் கட்சிப் பெயரைச் சொல்லி ஏமாற்றி நண்பர்களுக்கும் விருந்தாக்கி உள்ளதும் தெரியவந்தது.