திரையரங்கில் புகுந்து தாக்குதல்; அமமுக நிர்வாகி உட்பட ஐவர் கைது

திரையரங்கில் புகுந்து தாக்குதல்; அமமுக நிர்வாகி உட்பட ஐவர் கைது

1 mins read

சிதம்பரம்: மோட்டார்சைக்கிளை உரிய இடத்தில் நிறுத்தும்படி சொன்னதால் கோபமடைந்த அமமுக நிர்வாகி ஒருவர், அடியாட்களுடன் சென்று திரையரங்கையும் அதன் ஊழியர்களையும் தாக்கிய சம்பவம் சிதம்பரத்தில் நிகழ்ந்தது. மில்லர், 50, என்ற அந்நிர்வாகி இரு நாட்களுக்கு முன் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு திரையரங்கிற்குப் படம் பார்க்கச் சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளை நிறுத்துவது தொடர்பில் திரையரங்க ஊழியர் ஒருவருக்கும் மில்லருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. அதன்பின், உரிய இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு படம் பார்த்த மில்லர், இரவு 10.30 மணிக்கு தம்முடன் மேலும் சிலரை அழைத்துச் சென்று அந்தத் திரையரங்கை அடித்து நொறுக்கினர். தடுக்க வந்த மேலாளர் அலெக்சாண்டரும் தாக்கப்பட, காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதன் தொடர்பில் மில்லர் உட்பட ஐவர் கைதாகினர்; மேலும் பத்துப் பேரை போலிஸ் தேடி வருகிறது.