மொழிப்பாட நீக்கத்தால் சர்ச்சை

மொழிப்பாட நீக்கத்தால் சர்ச்சை

1 mins read

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான 'குரூப் 2' தேர்வில் இனி பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என்ற மொழிப் பாடத் தேர்வு இருக்காது என அறிவித்துள்ளது.

இதற்கு கனிமொழி, வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

"தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசுப் பணியில் சேரவே இது வழிவகுக்கும்," என கனிமொழி காட்டமாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், "தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தமிழ் தெரியாத எவரும் தேர்வெழுத முடியாது," எனத் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.

தமிழ்ச் சமூகத்தின் வரலாறு, அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள், தமிழ் இலக்கியம், திருக்குறள், சமூக நீதி, திராவிட இயக்கம், சுய மரியாதை இயக்கம் எனத் தமிழ் மொழி, தமிழக வரலாறு சார்ந்த பல அம்சங்களும் முதனிலைத் தேர்வுப் பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.