பிரபல எழுத்தாளர் மகரிஷி காலமானார்

பிரபல எழுத்தாளர் மகரிஷி காலமானார்

1 mins read
23a21b19-25a3-4bf8-b83c-d24c62eb8095
பிரபல எழுத்தாளர் மகரிஷி, உடல்நலக் குறைவால் தமது 87வது வயதில் நேற்று காலமானார். -

சேலம்: தஞ்சாவூரில் பிறந்த பிரபல எழுத்தாளரான மகரிஷி, உடல்நலக் குறைவால் தமது 87வது வயதில் நேற்று காலமானார். பாலசுப்பிரமணியம் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், மின்வாரியத்தில் பணிபுரிந்தார். சேலத்தில் வசித்து வந்த இவர் 130 புதினங்கள், ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், 60 கட்டுரைகள் உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். புவனா ஒரு கேள்விக்குறி, வட்டத்துக்குள் சதுரம் உள்ளிட்ட ஆறு தமிழ்த் திரைப்படங்கள் இவரது புதினங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டவை.