பழநி: நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, 'பழநி புஸ்ப கைங்கர்யா சபா' மூலம் நேற்று முன்தினம் பழநி மாரியம்மன் கோயிலில் இருந்து திண்டுக்கல் வழியாக திருப்பதிக்கு 10 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிகழ்வில் இணை ஆணையர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில் குமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து மற்றும் சபா நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இது தொடர்பாக பேசிய சபா நிர்வாகி மருதசாமி, "திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடக்கிறது. அதற்காக வாடாமல்லி, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் சென்டு மல்லி, சம்பங்கி உள்பட பல வண்ணப் பூக்களை அனுப்பி வைத்துள்ளோம்," என்றார்.

