பாஜகவுடனான கூட்டணி தொடரும்: முதல்வர் பழனிசாமி

பாஜகவுடனான கூட்டணி தொடரும்: முதல்வர் பழனிசாமி

1 mins read

சேலம்: இடைத்தேர்தலை பொறுத்தவரை அதிமுக போட்டியிடும் என்று அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்கெனவே விவரம் தெரிவித்து விட்டதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக பாஜகவுக்கு மாநிலத் தலைவர் யாரும் இல்லை என்பதால், அக்கட்சியுடன் இதுவரை இடைத்தேர்தல் குறித்து பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.

"நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி தொடரும் என்று கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டணியைப் பொறுத்தவரை அது நீடிக்கும் என்றும் பலர் தெரிவித்துள்ளனர். எனவே இது குறித்து சந்தேகம் வேண்டாம்.

"கீழடி அகழாய்வில் 1,2,3 கட்டங்களுக்கு மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்பிறகு 4 மற்றும் 5ஆம் கட்டங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

"இந்த ஆய்வுத் திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கு தமிழக அரசு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும்," என்றார் முதல்வர் பழனிசாமி.