தங்கமணி: மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்

தங்கமணி: மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்

1 mins read

நாமக்கல்: தமிழகத்தில் 5 ஆயிரம் மதுக்கடைகளும், 2 ஆயிரம் மதுக்கூடங்களும் இருப்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்றார்.

மதுக்கடைகளை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பது தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை என்று குறிப்பிட்ட அவர், அந்தக் கொள்கை எந்தவித சமரசமும் இன்றி நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்,

மதுக்கூடங்களுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் நடைமுறை உரிய முறையில் நடைபெறும் என்றும் அரசு மதுக்கடைகளில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் அமைச்சர் தங்கமணி மேலும் தெரிவித்தார்.

தமிழகத்தின் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்படுகிறது. இதையடுத்து அவ்வப்போது சில கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அமைச்சர் தங்கமணி மதுக்கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.