நாகர்கோவில்: பயணச்சீட்டு கேட்டதால் ஆத்திரமடைந்து அரசுப் பேருந்து நடத்துநரை ஓடும் பேருந்தில் தாக்கிய காவலர்கள் இருவர் கைதாகினர்.
நேற்று முன்தினம் குமிழியில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற அந்த இரு காவலர்களிடம் பேருந்து நடத்துநர் ரமேஷ், பணி நிமித்தம் இலவசமாகப் பயணம் செய்வதற்கான ஆவணத்தைக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரு காவலர்களும் அவரைத் தாக்கினர்.
இந்தக் காட்சியை பயணி ஒருவர் கைபேசியில் காணொளியாகப் பதிவு செய்து பின்னர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். முன்னதாக பயணிகள் அக்காவலர்களைக் கண்டித்தனர். மேலும் அந்த அரசுப் பேருந்தை அருகில் உள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று புகாரும் அளித்தனர். இதையடுத்து காவலர்கள் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.

