திருவள்ளூர்: சிகரெட் வாங்கித் தர மறுத்த இளையர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பொன்ராஜ் என்பவர் கைதாகி உள்ளார். நேற்று முன்தினம் இவர் மது போதையில் லால் பகதூர் சாஸ்திரி நகரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே தன் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த சாமுவேல் என்ற இளையரிடம் தனக்கு சிகரெட் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த சாமுவேல், அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இதனால் ஆவேசம் அடைந்த பொன்ராஜ், அவரைப் பின்தொடர்ந்து சென்று வழிமறித்ததுடன், கையில் வைத்திருந்த கத்தியால் சாமுவேல் மார்பில் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் சாமு வேல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
சிகரெட் வாங்கித் தர மறுத்த இளையரை கத்தியால் குத்திக் கொன்றவர் கைது
1 mins read

