இறுதிச்சடங்கில் உயிருடன் முணங்கிய குழந்தை

இறுதிச்சடங்கில் உயிருடன் முணங்கிய குழந்தை

1 mins read

தஞ்சை: இறந்துவிட்டதாகக் கூறி டாக்டர்கள் வீட்டுக்கு கொண்டுபோகச் சொல்லி திருப்பி அனுப்பி வைத்த குழந்தை, இறுதிச்சடங்கின் போது உயிருடன் முணங்கிய தால் பெற்றோர் அதிர்ந்தனர்.

தஞ்சை அருகே உள்ள வயலூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன்-பிரீத்தி தம்பதியர் தங்களது ஒரு வயது குழந்தை கெவினை காய்ச்சல் என்று கூறி தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி வீட்டிற்குத் திருப்பி அனுப்பினர். சவப்பெட்டியில் குழந்தையை வைத்தபோது உடலில் அசைவு ஏற்பட்டதால் பெற்றோர் மீண்டும் குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். டாக்டர்கள் 4 மணி நேரம் முன்பே குழந்தை உயிரிழந்த தாகக் கூறினர். டாக்டர்களின் கவனக்குறைவால் குழந்தை இறந்துவிட்டதாக குற்றஞ்சாட்டி பெற்றோர் போராட்டம் நடத்தினர்.