சென்னை கோட்டூர்புரத்தில் ஆயிரம் கர்ப்பிணிகள் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்வு நடந்தது. இதில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வெ.சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து நலுங்கு வைத்து சீர் வரிசைகளை வழங்கினர். அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் கர்ப்பகால முன்-பின் பராமரிப்பு குறித்த கையேடு, தாம்பூலத்துடன் கூடிய புடவை, சத்து மாவு, நெய், இரும்புச் சத்து டானிக், பேரீச்சம்பழம், கொய்யாப்பழம், சிறு தானிய பிஸ்கெட் ஆகியவை சீர்வரிசையாக வழங்கப்பட்டன. அத்துடன் கர்ப்பிணிகளுக்கு புளியோதரை, மாங்காய், எலுமிச்சை, புதினா, தேங்காய் என 5 வகையான சாதத்துடன் சாம்பார், வத்தல் குழம்பு, ரசம், மோர், அப்பளம், பால் பாயாசம் அடங்கிய விருந்தும் பரிமாறப்பட்டது. படம்: ஊடகம்
1,000 கர்ப்பிணிகளுக்கு அமைச்சர்கள் வளைகாப்பு
1 mins read
-

