பொன்னாடைக்கு பதிலாக நூல்கள்

பொன்னாடைக்கு பதிலாக நூல்கள்

1 mins read
bcc518e3-327e-461f-aa34-492b9cda177e
-

சென்னை: வாழ்த்து கூற வருபவர்கள் சால்வை, மாலை கள், பொன்னாடை களுக்குப் பதிலாக புத்தகங்களை வழங்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் அரிய புத்தகங்கள் குவிந்தன.

900க்கும் மேற்பட்ட இந்த புத்தகங்களை சென்னை, ஆயிரம்விளக்கு மேற்கு பகுதி, சேத்துப்பட்டு பாடசாலை, வெண்மணபூதூர் ஊராட்சி நூலகம் உள்ளிட்ட நூலகங்க ளுக்கு நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடி மு.க.ஸ்டாலின் வழங்கினார். படம்: ஊடகம்