செயற்கை சுவையூட்டிக்கு தடை

செயற்கை சுவையூட்டிக்கு தடை

1 mins read

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் 'அஜினோமோட்டோ' செயற்கை சுவையூட்டியைத் தமிழகத்தில் தடை செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்," என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

அஜினோமோட்டோவை தடை செய்ய நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அஜினோமோட்டோவை தமிழகத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கருப்பண்ணன் உறுதியளித்தார்.