சென்னை: தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுடன் ஒப்பிடுகையில் இந்தி மொழி, உறிஞ்சாடையுடன் (டயாப்பர்) இருக்கும் ஒரு கைக்குழந்தை என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வர்ணித்தார். சென்னையில் தன் கட்சி சார்பில் 500 மாணவிகளுக்கு மாதவிடாய் கால பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல், இந்தி என்ற அந்தக் குழந்தையையும் நாம் கவனித்துக்கொள்ளத்தான் வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்தால் ஜல்லிக்கட்டு போராட்டத்தைவிட மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் என்று தான் ஏற்கெனவே கூறியதை கமல் அந்த நிகழ்ச்சியில் நினைவூட்டினார்.
கமல்ஹாசன்: இந்தி ஒரு கைக்குழந்தை
1 mins read

