நெல்லை: நெல்லை கல்யாணி புரத்தில் பண்ணை வீட்டில் தங்கியிருந்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதியைக் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவில் அடையாளம் தெரியைாத இருவர் தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை அத்தம்பதியர் வீரத்துடன் விரட்டியடித்த சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்து 50 நாட்களுக்குப் பிறகு ரவுடி பாலமுருகன் என்பவனை காவல்துறை கைது செய்துள்ளது.
கைதான ஆடவர் மீது கடையம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இரண்டாமவரைப் பிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

