யாழ்ப்பாணம்: தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் 17ஆம் தேதி முதல் விமானச்சேவை தொடங்குவதாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். ஏறக்குறைய 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விமானச் சேவை தொடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்டமாக மதுரை, திருச்சி, சென்னை, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி ஆகிய விமான நிலையங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானங்கள் இயக்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருவதாக இலங்கைப் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

